அசைவ சமையல்
Sunday, 3 April 2016
Friday, 26 June 2015
இறால் வடை
ஆம வடை சாப்டு இருப்பீங்க.....மசால் வடை சாப்டு இருப்பீங்க...
மெது வடை சாப்டு இருப்பீங்க...
உங்களுக்காக இறால்வடை...
தேவையானவை
இறால் - 1 கப்
தேங்காய் துருவியது - 1 கப்
இஞ்சி - ஒரு துண்டு
பச்சை மிளகாய் - 4
உப்பு - தேவைக்கு
வெங்காயம் - 1/2 கப்
மிளகு தூள் - 1/2 ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - தேவைக்கு
செய்முறை
தேங்காய் துருவல், இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம், ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து கோரகொரவென அரைத்து கொள்ளவும்.
இறால்களை சுத்தம் செய்தபின் அரைத்து கொள்ளவும்.
அரைத்து வைத்த மசாலாவை இதனுடன் கலக்கவும்.
உப்பு மிளகுதூள் சேர்த்து வடைகளாக தட்டி தேங்காய் எண்ணெயில் பொரித்தெடுத்தால் வடா ரெடி....!
Thursday, 25 June 2015
Fish cutlet
செய்யிங்கோ........மீன் கட்லெட்
கட்லட்னாவே கும்முன்னு இருக்கும் அதுவும் மீன் கட்லெட்னா கும்மோ கும்முங்க.....
தேவையான் பொருட்கள்
மீன் : 1/2 கிலோ
உருளைக்கிழங்கு : 2
வெங்காயம் : 100 கிராம்
பச்சைமிளகாய் : 5
சீரகத்தூள் : 1/2 ஸ்பூன்
மிளகுத்தூள் : 1/2 ஸ்பூன்
மிளகாய்த்தூள் : 1 ஸ்பூன்
இஞ்சி பூண்டு அரைத்தது : 1/4 ஸ்பூன்
ரஸ்க் : 4
முட்டை : 4
எலுமிச்சை சாறு : 1/2 ஸ்பூன்
உப்பு : தேவையான அளவு
எண்ணெய் : தேவைக்கு
செய்முறை
மீன், உருளை கிழங்கு, இரண்டையும் வேகவைத்து மசித்து கொள்ளவும்.
கடாயில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம் பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு, அரைத்ததை வதக்கி கொள்ளவும்.
மீன் கலவையில் சேர்க்கவும்.
மிளகாய்த்தூள், சீரகத்தூள், எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
முட்டையின் வெள்ளை கருவை மட்டும் ஒரு பாத்திரத்தில் நன்றாக அடித்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மீன் கலவையை தட்டையாகவோ உருண்டையாகவோ மாற்றி ரஸ்க் தூளில் பிரட்டி பொரித்தெடுக்கவும்.
நன்றி
மட்டன் சமோசா
![]() |
| Add caption |
மட்டன் சமோசா
செய்ய தேவையான பொருட்கள்
மைதா : 350 கிராம்
பேக்கிங் பௌடர் : 1:2 தேக்கரண்டி
கொத்துகறி : 250 கிராம்
பெரிய வெங்காயம் : 1
மல்லிதழை : 1 கப்
புதினா இலை : 1 கப்
இஞ்சி : 1 அங்குலம்
பச்சை மிளகாய் : 4
தூள் உப்பு : தேவையான அளவு
நெய் : 3 தேக்கரண்டி
தயிர் : 1 தேக்கரண்டி
தக்காளி : பெரியது
கரம் மசாலா : தேக்கரண்டி
செய்முறை
மைதா மாவில் பேக்கிங் பவுடரை கலந்து கொள்ளவும்.
கொத்துக்கறியை கடாயில் போட்டு தண்ணீர் இல்லாமல் வதக்கி கொள்ளவும்.
ஒரு அளவுள்ள பெரிய வெங்காயம், மல்லிதழை, புதினா இலை, இஞ்சி, பச்சை மிளகாய், அனைத்தையும் சிறியதாக வெட்டிக்கொள்ளவும்.
மைதா, பேக்கிங் பவுடரை தேவையான உப்புடன் தேவையான தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
ஒன்னரை மணி நேரம் கழித்து மறுபடியும் பிசைந்து சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
ஒரு அளவுள்ள தக்காளியை தண்ணீரில் வேக வைத்து தோல் நீக்கி, கரம் மசாலா மல்லிதழை, புதினா இலை சேர்த்து கலந்து இறக்கி கொள்ளவும்.
கொத்து கறியுடன் நறுக்கிய வெங்காயம், இஞ்சி, தேவையான அளவு உப்புடன் தக்காளி கலவையை சேர்த்து கலக்கவும்.
மாவு உருண்டையை வட்டமாக தேய்த்து கொள்ளவும்.
வட்டங்களை கோன் வடிவமாக செய்து கலவையை வைத்து மூடவும்.
அரைமணி நேரத்திற்கு பிறகு அதை கடாயில் என்னில் போட்டு பொரித்தெடுக்கவும்.
சமோசா ரெடிங்கோ....!

Subscribe to:
Comments (Atom)