Thursday, 25 June 2015

Fish cutlet












செய்யிங்கோ........மீன் கட்லெட்

கட்லட்னாவே கும்முன்னு இருக்கும் அதுவும் மீன் கட்லெட்னா கும்மோ கும்முங்க.....

தேவையான் பொருட்கள் 

மீன் : 1/2 கிலோ
உருளைக்கிழங்கு : 2
வெங்காயம் : 100 கிராம்
பச்சைமிளகாய் : 5
சீரகத்தூள் : 1/2 ஸ்பூன்
மிளகுத்தூள் : 1/2 ஸ்பூன்
மிளகாய்த்தூள் : 1 ஸ்பூன்
இஞ்சி பூண்டு அரைத்தது : 1/4 ஸ்பூன்
ரஸ்க் : 4
முட்டை : 4
எலுமிச்சை சாறு : 1/2 ஸ்பூன்
உப்பு : தேவையான அளவு
எண்ணெய் : தேவைக்கு

செய்முறை

மீன், உருளை கிழங்கு, இரண்டையும் வேகவைத்து மசித்து கொள்ளவும்.
கடாயில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம் பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு, அரைத்ததை வதக்கி கொள்ளவும்.
மீன்  கலவையில் சேர்க்கவும்.
மிளகாய்த்தூள், சீரகத்தூள், எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து  கொள்ளவும்.
முட்டையின் வெள்ளை கருவை மட்டும் ஒரு பாத்திரத்தில் நன்றாக அடித்து கொள்ளவும்.
கடாயில்  எண்ணெய் விட்டு காய்ந்ததும் மீன் கலவையை தட்டையாகவோ உருண்டையாகவோ மாற்றி ரஸ்க் தூளில் பிரட்டி பொரித்தெடுக்கவும்.
தட்டுல இருக்கும் கட்டுலட்டு....
நன்றி 








No comments:

Post a Comment