Friday, 26 June 2015

இறால் வடை

ஆம வடை சாப்டு இருப்பீங்க.....
மசால் வடை சாப்டு இருப்பீங்க...
மெது வடை சாப்டு இருப்பீங்க...
உங்களுக்காக  இறால்வடை...

தேவையானவை

இறால் - 1 கப்

தேங்காய் துருவியது - 1 கப்

இஞ்சி -  ஒரு துண்டு

பச்சை மிளகாய் - 4

உப்பு -  தேவைக்கு

வெங்காயம் - 1/2 கப்

மிளகு தூள் - 1/2 ஸ்பூன்

தேங்காய் எண்ணெய் - தேவைக்கு


செய்முறை

தேங்காய் துருவல், இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம், ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து கோரகொரவென அரைத்து கொள்ளவும்.

இறால்களை சுத்தம் செய்தபின் அரைத்து கொள்ளவும்.
அரைத்து வைத்த மசாலாவை இதனுடன் கலக்கவும்.

உப்பு மிளகுதூள் சேர்த்து வடைகளாக தட்டி தேங்காய் எண்ணெயில் பொரித்தெடுத்தால் வடா ரெடி....!

No comments:

Post a Comment