Thursday, 25 June 2015

மட்டன் சமோசா

Add caption
ஆட்டுக்கறி என்றாலே  குழம்பு, பிரியாணி என ஞாபகம் வரும் நமக்கு மட்டனில் சமோசா என்றால் சற்று ஆனந்தம் தான். சரி அதன் செய்முறையை பார்ப்போம்.

மட்டன் சமோசா 
செய்ய தேவையான பொருட்கள் 

மைதா : 350 கிராம்

பேக்கிங் பௌடர் : 1:2 தேக்கரண்டி

கொத்துகறி : 250 கிராம்

பெரிய வெங்காயம் : 1

மல்லிதழை : 1 கப்

புதினா  இலை : 1 கப்

இஞ்சி : 1 அங்குலம்

பச்சை மிளகாய் : 4

தூள் உப்பு : தேவையான அளவு

நெய் : 3 தேக்கரண்டி

தயிர் : 1 தேக்கரண்டி

தக்காளி : பெரியது

கரம் மசாலா : தேக்கரண்டி

செய்முறை 

மைதா மாவில் பேக்கிங் பவுடரை கலந்து கொள்ளவும்.
கொத்துக்கறியை கடாயில் போட்டு தண்ணீர் இல்லாமல் வதக்கி கொள்ளவும்.
ஒரு அளவுள்ள பெரிய வெங்காயம், மல்லிதழை, புதினா இலை, இஞ்சி, பச்சை மிளகாய், அனைத்தையும் சிறியதாக வெட்டிக்கொள்ளவும்.
மைதா, பேக்கிங் பவுடரை தேவையான உப்புடன் தேவையான தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
ஒன்னரை மணி நேரம் கழித்து மறுபடியும் பிசைந்து சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
ஒரு அளவுள்ள தக்காளியை தண்ணீரில் வேக வைத்து தோல் நீக்கி, கரம் மசாலா மல்லிதழை, புதினா இலை சேர்த்து கலந்து இறக்கி கொள்ளவும்.
கொத்து கறியுடன் நறுக்கிய வெங்காயம், இஞ்சி, தேவையான அளவு உப்புடன் தக்காளி கலவையை சேர்த்து கலக்கவும்.
மாவு உருண்டையை வட்டமாக தேய்த்து கொள்ளவும்.
வட்டங்களை கோன் வடிவமாக செய்து கலவையை வைத்து மூடவும்.
அரைமணி நேரத்திற்கு பிறகு அதை கடாயில் என்னில் போட்டு பொரித்தெடுக்கவும்.
சமோசா ரெடிங்கோ....!










No comments:

Post a Comment